Thursday, January 30, 2014

வீட்டிலேயே அன்பளிப்புப் பைகள் செய்வது எப்படி? முகப்பு  வீட்டிலேயே அன்பளிப்புப் பைகள் செய்வது எப்படி? இந்த அன்பளிப்பு பையினை செய்து காட்டியவர், அறுசுவையின் நீண்ட நாள் அங்கத்தினராகிய திருமதி. இமா அவர்கள். 24 வருடமாக ஆசிரிய பணியை சிறப்புடன் செய்து வருகிறார். உணவுகள் தயாரிப்பதில் இருக்கும் ஆர்வத்தைவிட அதை கலையுணர்வுடன் அழகுபடுத்தி பரிமாறுவதில்தான் மிகவும் ஆர்வம் என்று சொல்லும் இவர், கைவினைப் பொருட்கள் செய்வதிலும் மிகத் திறமை வாய்ந்தவர். A4 காகிதம் - ஒன்று ரிப்பன் (30 செ.மீ) - 2 அட்டை (8 செ.மீ x 10 செ.மீ) - ஒன்று பசை ஸ்கேல் கத்தரிக்கோல் பென்சில் துளையிடும் கருவி பேப்பர் பை செய்ய தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். படத்தில் காட்டியுள்ளது போல் 3 மூன்று அளவுகளிலும் அட்டை துண்டுகள் வெட்டி எடுத்துக் கொள்ளவும். அகலமான பக்கத்தினை இரண்டையும் இணைத்து இரு பக்கங்களிலும் 2 செ.மீ அளவிற்கு ஒன்றன் மேல் ஒன்று வைத்து ஒட்டி விட்டு ஒரு முறை அழுத்தி விடவும். அட்டைகளை ஒட்டி மடித்த இடத்திலிருந்து 4 செ.மீ தள்ளி மீண்டும் ஒரு மடிப்பு செய்துக் கொள்ளவும். சிறியதாக வெட்டிய அட்டை துண்டுகளை வாய்பக்கம் உள்ள மடிப்பினுள் சொருகி ஒட்டி விடவும். படத்தில் காட்டியுள்ளது போல் பையை ஒரு முறை மடக்கிக் கொள்ளவும் பையின் பின்புறம் 4 செ.மீ அளவு அளந்து மடித்துக் கொள்ளவும். பின்னர் இரு மூலைகளையும் மடித்து அழுத்தி விடவும். இந்த மடிப்புகளின் வழியே பையின் அடிப்புறத்தை ஒட்டிக் கொள்ளவும். மீதமுள்ள அட்டை துண்டை பையின் அடிப்புறம் வைத்து ஒட்டி விடவும். பையின் வாய்ப்புறத்தை துளையிடும் கருவியை வைத்து நேர் நேராக துளைகள் போட்டுக் கொள்ளவும். பிறகு அந்த துளையின் வழியாக ரிப்பன் துண்டுகளை நுழைத்து உட்புறமாக முடிச்சுகள் போட்டுக் கொள்ளவும். அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு பைகளை அலங்கரித்துக் கொள்ளலாம். நேரம் கிடைக்கும் போது இதுப் போல் பைகள் செய்து மடித்து வைத்துக் கொண்டால் தேவையான போது எடுத்து அலங்கரித்து கொள்ளலாம். கைப்பழக்கம் வந்துவிட்டால் பிறகு எந்த அளவுக் கடதாசியிலும் பைகள் செய்யலாம்.